search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க நீதிமன்றம்"

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த ஒபாமாகேர் மருத்துவ காப்பீடு திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Texasjudge #Obamacare
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA) என்ற திட்டத்தை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2010-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டம் பரவலாக ‘ஒபாமாகேர்’ திட்டம் என்று அந்நாட்டவர்களால் அழைக்கப்படுகிறது. சுமார் 5 கோடி மக்கள் பலனடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்தும் இதுதொடர்பாக ஒபாமா அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் சிலர்  வழக்குத் தொடர்ந்தனர் 

    இந்த சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டில் தீர்ப்பளித்திருந்தது. 

    ஒபாமாவுக்கு பின்னர் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற பின்னர் முதல் வேலையாக இந்த ஒபாமாகேர் திட்டத்தை ஒழிப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார். 

    இந்நிலையில், இதுதொடர்பாக டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஒபாமாகேர் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது, செல்லத்தக்கதல்ல என தீர்ப்பளித்துள்ளார்.

    இந்த திட்டத்தில் இணையாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளதை  சுட்டிக்காட்டி நீதிபதி  ரீட் ஓ கான்னோர் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு மிக உயர்வான செய்தியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Texasjudge #Obamacare 
    அமெரிக்காவில் தந்தையை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USIndianSentence #IndianKillingFather
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் சைலேவில்லெ நகரில் வசித்து வருபவர் விஷால் ஷா(வயது 22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், இவரது தந்தை பிரதீப்குமார் ஷாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷால் ஷா கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷால் ஷாவை கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நியூ பிரன்ஸ்விக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தந்தையை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக விஷால் ஷாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் விஷாலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், 85 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்தபிறகே பரோல் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #USIndianSentence #IndianKillingFather
    எதிர்க்கருத்து கூறுபவர்களை ப்ளாக் செய்யும் வசதி ட்விட்டரில் இருக்கும் நிலையில், டிரம்ப் அப்படி யாரையும் பிளாக் செய்ய கூடாது என அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Trump
    வாஷிங்டன்:

    ட்விட்டர் எனும் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டிரம்ப் முக்கிய இடம் வகிக்கிறார். 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிரம்பை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    காரசாரமான அரசியல் விமர்சனம், ஊடகங்களை கடுமையாக சாடுவது என தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து டிரம்ப் ஆக்டிவாக இருப்பவர். தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை பிளாக் செய்வதும் வாடிக்கையான ஒன்றே. இதில், டிரம்பால் பிளாக் செய்யப்பட்ட 7 பேர் கோர்ட்டை நாடினர்.

    டிரம்ப் தங்களை பிளாக் செய்துள்ளதால், அவரது ட்விட்டர் பதிவை எங்களால் படிக்க முடியவில்லை என அவர்கள் அமெரிக்க பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணையில், பின்தொடர்பவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் தடை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பதிலை ஏற்க மறுத்த நீதிபதி, சமூகவலைதளங்களில் பொதுமக்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றும், அதனை பிரதமரின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்தார்.

    மேலும், டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களை தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. #Trump
    ×